உடன் வர துணை ஒன்று வேண்டாமா
இது தந்தை கேள்வி
உனக்கென சான்று ஏதும் வேண்டாமா
இது அன்னை கேள்வி
துறவறம் வேண்டி தவமா
இது உடன் பிறந்தோர் கேள்வி
தனிமைக்கு வாழ்க்கை தானமா
இது நண்பர்கள் கேள்வி
எனக்கென ஒரு மனம் இல்லையா
அதை உணர்பவருக்கு காத்திருக்கும்
இதுவே என் வேள்வி!!!
No comments:
Post a Comment