Wednesday, January 26, 2011

Kaadhalin Saaral!!!

உன்னை எண்ணி தூக்கம் அது தொலைந்தது
பகல் இரவு இன்றி நேரம் அது விரைந்தது
காணாமல் கண்கள் அது கரைந்தது
உன் நினைவு கனவெல்லாம் நிறைந்தது
உயிரோ உன்னை சேர துடித்தது
இருந்தும் நேரில் கண்ட போது எது என்னை தடுத்தது????





Thursday, January 20, 2011

Nee Varuvaai Ena....

கண்ட  கனவோ  ஓராயிரம்
உன்னை  பார்த்த பின்  ஆனது  நூறாயிரம்
உன்னுடன்  கனவில்  சென்றேன்  பல  தூரம்
பிரியும் தருணமோ பெரும்  துயரம்  :( :( :(

Thursday, January 13, 2011

En Mana Vaanil!!!

உடன்  வர  துணை  ஒன்று  வேண்டாமா 
இது  தந்தை  கேள்வி 
உனக்கென சான்று  ஏதும்  வேண்டாமா 
இது  அன்னை  கேள்வி 
துறவறம்  வேண்டி  தவமா 
இது  உடன்  பிறந்தோர்  கேள்வி 
தனிமைக்கு  வாழ்க்கை தானமா
இது  நண்பர்கள்  கேள்வி 
எனக்கென ஒரு  மனம்  இல்லையா 
அதை  உணர்பவருக்கு  காத்திருக்கும் 
இதுவே  என்  வேள்வி!!!

Friday, January 7, 2011

Marava Ninaivu!!!

எங்கு விழுந்தேன் என்று தெரிந்தால் 
அவ்வழி போக மாட்டேன் 
எப்படி விழுந்தேன் என்று அறிந்தால் 
அப்பழி சுமக்க மாட்டேன் 
என்று விழுந்தேன் என்று உணர்ந்தால் 
அந்நாளை நினைக்க மாட்டேன் 
எதில் விழுந்தேன் என்று புரிந்ததால் 
உன்னை என்றும் மறக்க மாட்டேன்  :)

Saturday, January 1, 2011

Kannalane!!!

கற்றறிந்த உன்னை வார்த்தையால் கடத்த இயலாமல்
கடை கண் பார்வையின் துணை தேடினேன்
வர்ணனையால் என் மனதுடன் சேர்த்து
கண்களையும் கைது செய்தாயே!!!
நிராயுதமாய் காதல் எனும் போரில்
என்னை தோற்க்கடித்தாயே!!!!