கிடைத்த அரை மணி துளியில்
மனதை மொத்தமென கடத்திய கள்வனே !!!
அன்று கண்களால் பேச தெரிந்த போது
மனதை அறிய மறந்தேன் !!!
இன்று மனதை உணர முயன்று
கண்ணிழந்து நிற்கின்றேன் !!!
என் பரிதவிப்பை பார்த்த பின்பும்
ஏன் இந்த புண்சிரிப்பு ???
இதை வரம் என்று கொள்வதா - இல்லை
சாபம் என்று தள்ளுவதா???
நான் என்னென்று சொல்ல ,
எதிர்த்து எங்கு செல்ல ???
உன்னிடம் சரண் அடைந்தேன் ;
அடைந்த பின் விடை அறிந்தேன் !!!